Lune Tiles®

Shine Like Moon.
Strong Like Diamond.
Protects Like Shield.

லூனி டைல்ஸ் - க்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றோம். லூனி டைல்ஸ்® ஒரு பதிவு செய்யப்பட்ட பிராண்ட். நாங்கள் தமிழ்நாட்டின் சென்னையை தளமாகக் கொண்ட கூல் ரூஃப் டைல்ஸ் உற்பத்தியாளர்.100% சுற்றுச்சூழல்-க்கு உகந்த கூலிங் டைல்ஸ்-ஐ தயாரிக்கின்றோம். லூன் கூலிங் டைல்ஸ் ஓடுகள் பதித்த மொட்டை மாடியில் உச்சி வெயில் நேரங்களில்கூட வெறுங்காலுடன் நடக்க முடியும். இது சூரிய ஒளியின் வெப்பத்தை உள்வாங்காமல் பிரதிபலித்து உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் பசுமையான பூமிக்கும் பங்களிக்கிறது. 13+ ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவம் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களுடன், தரமான சேவையை வழங்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

கும்பகோணம், புதுச்சேரி, வேலூர், ஆரணி, ஓசூர், கோயம்புத்தூர், சேலம், மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், என பல்வேறு நகரங்களில் நமது பிராந்தியங்கள் உள்ளது. மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திண்டிவனம், விழுப்புரம், கடலூர், சிதம்பரம், திருவண்ணாமலை, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, பெங்களூர், திருப்பதி மற்றும் நெல்லூர் போன்ற பகுதிகளுக்கு நாங்கள் நேரடியாகவே லுனி டைல்ஸ்-ஐ நேரடியாக சேவையை வழங்குகின்றோம்.

கூல் ரூஃப் டைல்ஸ் என்றால் என்ன?

வெள்ளை நிற கூல் ரூஃப் டைல்ஸ், சிகப்பு நிற தட்டு ஓடுகளுக்கு (மங்களூர் சிகப்பு ஓடு, கேரளா சிகப்பு ஓடு) மாற்றாக மொட்டை மாடியில் பதிக்கும் பிரத்யேக தயாரிப்பு கூல் ரூஃப் டைல்ஸ் ஆகும். இது வெப்பத்தை பிரதிபலிக்ககூடிய பல இயற்கையான தாதுக்களை (eco-friendly) கொண்டு வெள்ளை நிறத்தில் (White Colour) தயாரிக்கப்படுகிறது. இது சூரிய ஒளியின் வெப்பத்தை கடத்தாமல் பிரதிபலித்து அந்த ஆற்றலை வளிமண்டல காற்றில் கலப்பதால் வீட்டின் உட்புற வெப்பத்தாக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது.

கூல் ரூப் டைல்ஸ் அவசியமா?

இன்றைய பருவநிலை மாற்றத்தினால் பூமியின் தட்பவெப்பம் அதிகரித்து கொண்டிருக்கிறது. வருடம்தோறும் கோடையின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதனால் வீட்டினுள் அதிகப்படியான உஷ்ணம் உணரப்படுகிறது. வீட்டினுள் வெப்பத்தாக்கத்தை குறைப்பதற்கு பொதுவாக வெதரிங் கோர்ஸ் அமைத்து சிகப்பு நிற தட்டு ஓடு பதிப்பது தான் வழக்கம். இது பழமைமையானதாக இருந்தாலும் இன்றைய காலக்கட்டத்தில் வருடத்தில் 8 முதல் 10 மாதங்கள் வரை அதிகப்படியான வெயில் அடிக்கும் பொழுது, அந்த வெயிலின் வெப்பம் சிவப்பு டைல்ஸில் உள்வாங்கி சுருக்கி (Weathering Course) மற்றும் ரூஃப் - ஐ கடந்து வீட்டினுள் அதிக வெக்கையை தருகிறது. பொதுவாக மதியம் 12.00 மணிக்கு மேல் வீட்டினுள் வெக்கை அதிகமாக இருப்பதை உணர முடியும். இந்த மின்விசிறி சுழலுகையில் உஷ்ணம் மிக அதிகமாக இருப்பதை உணர முடியும். இதன் தாக்கம் இரவு 11, 12 மணி வரை தொடர்ந்து இருப்பதை யாராலும் மறுக்க இயலாது. எனவே கூல் ரூஃப் டைல்ஸ் நம் வீட்டின் மொட்டை மாடியில் பதிப்பதினால் சூரிய ஒளியின் வெப்பத்தை கடத்தாமல் பிரதிபலித்து வீட்டின் உட்புற வெப்பத்தாக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது.

difference between white cool roof tiles and red clay tiles

கூல் ரூஃப் டைல்ஸ் நன்மைகள்:

1.வெதரிங் கோர்ஸ் தவிர்த்து தேவையான இடத்திற்கு மட்டும் கிரானோ தளம் அமைத்து கூல் ரூஃப் டைல்ஸ் பதிப்பதால் கட்டுமான பொருட்களின் அளவு குறையும், அதன் மூலம் ரூஃப் - ன் தேவையற்ற எடையை குறைக்கலாம்.

2.கட்டுமான பொருட்களின் அளவு குறைவதால் 15% வரை செலவையும் குறைக்கலாம்.

3.கூல் ரூஃப் டைல்ஸ் நம் வீட்டின் மொட்டை மாடியில் பதிப்பதினால் சூரிய ஒளியின் வெப்பத்தை கடத்தாமல் பிரதிபலித்து வீட்டின் உட்புற வெப்பத்தாக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது.

4.வீட்டிற்குள் வெக்கை கட்டுப்படுவதால் ஏசி-யின் (A/C) பயன்பாடு குறைந்து சில நிமிடங்களில் அந்த இடம் விரைவாக குளிர்விக்கப்படுவதால் சராசரியாக 15% முதல் 20% வரை மின்சாரா சிக்கனம் பெறலாம்.

5.நாம் ஒரு விதையை விதைத்து வளர்ந்து மரமாகி புவி வெப்பமடைவதை குறைப்பது போல், கட்டிடங்களின் மேல் தளத்தை வெள்ளை நிறமாக மாற்றுவதன் மூலமாகவும் புவி வெப்பமடைவதை (Global Warming) குறைக்கலாம். மேலும் வளர்ந்து மரமாகி பலன் தர பல வருடங்கள் ஆகும். ஆனால் எளிதில் நம் வீட்டின் மொட்டை மாடியையை வெள்ளை நிறமாக மாற்றி புவி வெப்பமடைவதை குறைக்கலாம்.

புவி வெப்பமடைதல் (Global Warming):

வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட பசுங்குடில் வாயுக்கள் (Greenhouse gases) அதிகரிப்பதால், பூமி இயல்புக்கு மாறாக வெப்பமடைவதே புவி வெப்பமடைதல். கடந்த 100 ஆண்டுகளில் பூமியின் சராசரி வெப்பநிலை 0.8 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.

மேலும் பருவநிலை மாற்றத்தினால் புவி வெப்பமயமாதலை (Global Warming) தடுக்கும் வண்ணம் கட்டிடங்களின் மேல்தளத்தை வெள்ளை நிறமாக (White Roof) மாற்றுவதன் மூலமாகவும் புவி வெப்பமடைவதையும், பருவநிலை மாற்றத்தையும் குறைக்க முடியும், என்று பல்வேறு அறிவியல் ஆராய்ச்சியின் மூலம் நிரூபணமாகி, பல உலக நாடுகள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.

சிறந்த கூலிங் டைல்ஸ் தேர்வு செய்வது எப்படி?

கூலிங் டைல்ஸ் தேர்வு செய்யும் போது மிக முக்கியமாக SRI value-வை கருத்தில் கொள்ளவேண்டும், ஏனெனில் SRI value அதிகம் உள்ள White Cool Roof tiles அதிகப்படியான சூரிய வெப்பத்தை பிரதிபலித்து வீட்டின் உஷ்ணத்தை குறைக்கும்.

மேலும் 4 விதமான test இருக்கிறது,

  • 1.Dimension

  • 2.Warpage

  • 3.Water absorbtion

  • 4.Flexural strength

போன்ற சோதனை மூலம் IS standard- உடன் ஒப்பிட்டு சிறந்த கூலிங் டைல்ஸ்-ஐ தேர்ந்தெடுக்கலாம்.

Cool roof tiles

Lune Cool Roof tiles?

லூனி டைல்ஸ் இது ஒரு cool roof tile இதை பலரும் பலவிதமாக தேடுகிறார்கள்.

  • Cooling Tiles
  • cool roof tile
  • Heat resistance tile
  • Weathering tile
  • White roof tile
  • Heat reflective tile
  • White Tiles
  • Cool tiles
  • Solar reflection index Tiles
  • Thermal insulation tile

என Google போன்ற சமூக வலை தளங்களில் தேடப்படுகிறது.

White roof tiles

லூனி கூலிங் டைல்ஸின் தனிச்சிறப்பு

வெள்ளை நிற டைல்ஸ்-ல் வெண்மை அதிகமாக இருப்பதால் சூரிய ஒளியின் பிரதிபலிப்பு அதிகமாக இருக்கும். லூனி டைல்ஸின் SRI மதிப்பு 94 இது இந்திய அரசின் தர சான்று நிறுவனம் [CEPT University] அங்கீகரித்துள்ளது. ஒரு மணி உச்சி வெயிலிலும் 2 வயது குழந்தைகள் கூட மொட்டைமாடியில், காலணிகள் இல்லாமல் நடக்க, விளையாட முடியும். ஏனெனில் இது வெப்பத்தை பிரதிபலிப்பதால் வெயிலின் சூடு டைல்ஸ் -ன் மீது தெரியாது, கால்களும் சுடாது. நமது லூனி டைல்ஸ் மற்ற டைல்ஸ்களை விட மிக அதிக வெண்மையாகவும், தரமானதாகவும் தயாரிக்கப்படுகிறது. எனவே அதிகப்படியான சூரிய புற ஊதா கதிர்கள் பிரதிபலிப்பதினால் வெப்பம் உள்வாங்குவதில்லை, இதனால் வீட்டுக்குள் வெப்பத்தின் தாக்கம் முற்றிலும் தடுக்கப்படுகிறது.

லூனி டைல்ஸ் -ன் வகைகள்

Lune Ceramic+

300 X 300 X 10MM

லூனி செராமிக்+ கூல் ரூஃப் டைல்ஸ் 10MM நமது வீட்டை கோடை வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் மற்றொரு பிரத்யேக தயாரிப்பாகும், அதே நேரத்தில் எடை குறைவாக இருக்கும், இது ரூஃப் - ன் எடையைக் குறைக்க உதவுகிறது. லூனி செராமிக்+ கூல் ரூஃப் டைல்ஸ் , பால்கனி, நடை பாதை மற்றும் வெளிப்புற மேற்பரப்புகளுக்கு ஏற்றது, இது சூடான சூரிய கதிர்களின் வெப்பத்தை பிரதிபலிக்கிறது மற்றும் உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்கும். இதன் மேற்பரப்பு வழுக்காத வண்ணம் matte finish மற்றும் இது அழகியல் ரீதியாகவும், வெப்ப பாதுகாப்புக்கு ஏற்றதாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது. லூனி செராமிக்+ கூல் ரூஃப் டைல்ஸ் 300 MM x 300 MM x 10 MM தடிமன் உள்ளது. இது கட்டுமானத்திற்கு ஏற்ற அளவு மற்றும் கையாள எளிதானது. இந்த ஓடுகளின் பராமரிப்பு மிகவும் எளிதானது. லூனி செராமிக்+ கூல் ரூஃப் டைல்ஸ் உங்கள் வீட்டின் அழகை மேம்படுத்தும் அதே வேளையில் உங்கள் வீட்டை குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும்.

Lune Ceramic

300 X 300 X 8MM

லூனி செராமிக் கூல் ரூஃப் டைல்ஸ் 8MM நமது வீட்டை கோடை வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் மற்றொரு தயாரிப்பு ஆகும், அதே நேரத்தில் எடை குறைவாக இருக்கும், இது ரூஃப் - ன் எடையைக் குறைக்க உதவுகிறது. லூனி செராமிக் மொட்டை மாடி ஓடுகள் , பால்கனி, நடைபாதை மற்றும் வெளிப்புற மேற்பரப்புகளுக்கு ஏற்றது, இது சூடான சூரியக்கதிர்களின் வெப்பத்தை பிரதிபலிக்கிறது மற்றும் உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்கும். இதன் மேற்பரப்பு வழுக்காத வண்ணம் matte finish மற்றும் இது அழகியல் ரீதியாகவும், வெப்ப பாதுகாப்புக்கு ஏற்றதாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது. லூனி செராமிக் கூல் ரூஃப் டைல்ஸ் 300 MM x 300 MM x 8 MM தடிமன் உள்ளது. இது கட்டுமானத்திற்கு ஏற்ற அளவு மற்றும் கையாள எளிதானது. இந்த ஓடுகளின் பராமரிப்பு மிகவும் எளிதானது. லூனி செராமிக் கூல் ரூஃப் டைல்ஸ் உங்கள் வீட்டின் அழகை மேம்படுத்தும் அதே வேளையில் உங்கள் வீட்டை குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும்.

Lune Gold+

( 254MM X 254MM X 15 MM )

லூனி Gold+ (Premium quality) இது Top to bottom 15mm ஒரே கலவையாகத் தயாரிக்கப்படுகிறது. இதில் Natural minerals அதாவது வெப்பத்தை பிரதிபலிக்க கூடிய பல இயற்கையான தாதுக்களை கொண்டு ( 254MM X 254MM X 15 MM ) 10 inch -க்கு 10 inch 15MM தடிமனில் தயாரிக்கப்படுகிறது. இதன் தன்மை என்றும் மாறாது. இதன் எடை 2.1 KG இருக்கும்.

Lune Silver+

( 254MM X 254MM X 15 MM )

லூனி silver + மேல் புறம் (Top layer) 3 to 5 mm Gold+ -ல் பயன்படுத்தக்கூடிய White minerals இருக்கும். கீழ் புறம் (Bottom layer) கிரே சிமெண்ட் கான்கிரேட்டால் நிரம்பி இருக்கும். இது ( 254MM X 254MM X 15 MM ) 10 inch -க்கு 10 inch 15MM தடிமனில் தயாரிக்கப்படுகிறது. இதன் எடை 2.1 KG இருக்கும்.இந்த சில்வர்+ ஒரு Economical product.

ஏன் லூனி டைல்ஸ் சிறந்தது?

Solar Reflectance Index ( SRI )

பொதுவாக Cool roof tiles - SRI value என்பது மிக முக்கியம். SRI value என்றால் Solar Reflectance Index. இது சூரிய ஒளியின் வெப்பத்தை பிரதிபலிக்கும் அளவீடு ஆகும். Cool Roof Tiles -ன் SRI value 94 . இதை நம் இந்திய அரசாங்கத்தின் அங்கிகாரம் பெற்ற அகமதாபாத் - CEPT UNIVERSITY - மூலம் சோதனையின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதற்கு சான்றாக லூனி டைல்ஸ் பதித்த வீட்டில் வெப்பத்தின் அதிகப்படியான தாக்கம் இருக்காது. ஏனென்றால் சூரிய வெப்பத்தைக் கடத்தாமல் பிரதிபலிப்பதினால் வீட்டின் உட்ப்புற வெப்பத்தாக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் வீட்டுக்குள் வெக்கை இருக்காது. இது தான் லூனி டைல்ஸ்-ன் சிறப்பு. நமது Lune Cool roof tiles, IS:2690(1) -1993 -இன் அடிப்படையில் இந்திய அரசின் கட்டுமான பொருட்களின் ஆய்வகத்தில் NTH - (National Test House) தர சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு,

Dimension

லூனி டைல்ஸ் 10inch X 10inch size (254mm X 254mm) அளவில், இதன் கனம் (Thickness) +-15mm அளவில் மட்டும் தயாரிக்கப்படுகிறது.

Warpage

Tile- ன் surface-ல் எத்தனை சதவீதம் பெண்ட் உள்ளது என்பதை IS standard -ல் செய்யப்படும் சோதனை, பொதுவாக tiles -ன் surface -ல் பெண்ட் 1% -க்கு அதிகமாக இருக்கக்கூடாது. லூனி டைல்ஸ் – ன் Warpage 0.15 % மட்டுமே உள்ளது.

Water absorption

IS standard-ல் Water absorption 20%க்கு அதிகமா இருக்க கூடாது. லூனி டைல்ஸ்-ல் அதிகப்படியாக Water absorption 6% வரை மட்டும் உள்ளது.

Flexural strength

IS standard படி 1.5 N/mm2-க்கு குறைவாக இருக்ககூடாது. லூனி டைல்ஸ் 4.9 N/mm2 இருக்கிறது. இது இது IS Standard-ஐ விட மூன்று மடங்கு அதிக தரமாகவே நமது லூனி டைல்ஸ் தயாரிக்கப்படுகிறது. இதனால் நமது லுனி டைல்ஸ் -ன் சேதாரம் (Minimum Wastages) மிகவும் குறைவு.

லூனி கூலிங் டைல்ஸ் பதிக்கும் வழிமுறைகள்

Lune cool roof டைல்ஸ் மொட்டை மாடியில் பதிப்பதை காணொளியில் பார்க்கலாம்.

மேலும் காணொலி வாயிலாக...

கூலிங் டைல்ஸ்-ஐ பதிக்க தெரிந்து கொள்ள வேண்டியவைகள்

புதிய கட்டுமானத்திற்கு லூனி கூலிங் டைல்ஸ் பதிப்பதற்கு முன் மொட்டைமாடியில் கலவையை தட்டி சுத்தம் செய்துவிட்டு, கைப்பிடி சுவற்றில் கீழ் இருந்து மேல் 9 இன்ச் வரை கட் செய்ய வேண்டும். பின் அங்கு செங்கல் மறையும் அளவுக்கு சிறிதளவு சிமெண்ட் கலவையை பூச வேண்டும். மறுநாள் தண்ணீர் ஊற்றி அல்லது Air blower மூலமாக நன்றாக சுத்தம் செய்த பிறகு வாட்டர் புரூஃப் கோட்டிங் செய்ய வேண்டும். இதற்கு வாட்டர் புரூஃப் லிக்யூட் மற்றும் கிரே சிமெண்ட்டை 1:1 விகிதத்தில் Waterproof compound 1 பங்கு, Grey சிமெண்ட் 1 பங்கு என இரண்டையும் Paint பதத்திற்கு கலந்து அதை மொட்டைமாடியில் குறுக்கும், நெடுக்குமாக இரண்டு கோட்டிங் அடிக்க வேண்டும். அதாவது முதல் கோட்டிங் (Vertical manner) -ல் குறுக்காக அடிக்கும் பட்சத்தில், அது நன்றாக காய்ந்த பின், இரண்டாவது வாட்டர் புரூஃப் கோட்டிங் நெடுக்காக Opposite direction-ல் (Horizontal manner) -ல் செய்ய வேண்டும். ஸ்கர்டிங் டைல்ஸ் பதிக்க 9 இன்ச் வரை கட் செய்து பூசிய இடத்திலும் வாட்டர் புரூஃப் கோட்டிங் செய்ய வேண்டும். பிறகு மழை நீர் வெளியேற்றும் குழாய்களை நன்றாக அடைத்துவிட்டு கணுக்கால் அளவுக்கு மட்டும் 3 முதல் 4 இன்ச் வரை மட்டும் மொட்டைமாடியில் குறைந்தது 5 முதல் 7 நாள் வரை தண்ணீரை தேக்கி நீர்க்கசிவு இல்லை என்பதை உறுதி செய்த பின்பு தான் கூலிங் டைல்ஸ் பதிக்கும் வேையை தொடங்கவேண்டும். Waterproof coating என்பது ரூஃப -ன் மேலே ஒரு Enamel போல பாதுகாத்து நீர்க்கசிவை தடுக்க பயன்படும்.

வாட்டர் புரூஃப் கோட்டிங் செய்து, நீர்க்கசிவு இல்லை என்பதை உறுதி செய்த பிறகு, மழை நீர் வாட்டத்திற்கு ஸ்லோப்பிங் மார்க் செய்து கிரானோ தளம் (Grano Flooring) அமைக்க வேண்டும். இதற்கு 1:2:4 என்ற விகிதத்தில் 1 பங்கு சிமெண்ட், 2 பங்கு மணல் அல்லது M-Sand, 4 பங்கு பேபி சிப்ஸ் (8mm அல்லது 12mm Blue Metal Chips) என்ற விகிதத்தில், மழை நீர் வாட்டத்திற்காக ஒரு இன்ச் கனத்திற்கு மேல் கலவை கனம் கூட்ட வேண்டிய இடத்திற்கு மட்டும் சிப்ஸ் கான்கிரிட் (Grano Flooring) அமைக்கவேண்டும்.பரப்பளவிற்கு தகுந்தாற்போல எண்ணிக்கையில் ஒன்றிற்கு மேற்பட்ட மழைநீர் வடிகால் குழாய் (Rain Water Drain Pipe) அமைத்து வாட்டம் அமைப்பதினால் கட்டுமான பொருட்களின் அளவு குறையும், அதன் மூலம் மேல்தளத்தின் அதிக சுமை குறைவதோடு 15% வரை பணத்தை மிச்சப்படுத்தலாம்.

கிரானோ தளம் அமைத்த பின் அதன் மேல் 1:8 எனும் விகிதத்தில், 1 பங்கு சிமெண்ட், 8 பங்கு மணல் அல்லது M-Sand கலந்த கலவையால் தளம் அமைத்து, அதன் மேல் சிமெண்ட் பாலை ஊற்றி டைல்ஸ்-ன் பிடிமானத்திற்கு கீறல்கள் போட்டு குறைந்தது 8mm முதல் 10mm வரை (Spacer) ஸ்பேசர் பயன்படுத்தி சீரான இடைவெளியில் டைல்ஸ் -ஐ மாற்று எசையில் (Break Joint) பதிக்க வேண்டும்..

டைல்ஸ் பதிக்கும் வேலையை தோராயமாக 120 சதுர அடி முதல் 150 சதுர அடிக்கு மட்டும் கலவை-ஐ பரப்பி லுனி டைல்ஸ் பதிக்க வேண்டும். அதிக பரப்பளவில் கலவையை பரப்பி எளிதில் உளர்ந்து விட்டால் டைல்ஸ் பதிக்கும்போது பிடிமானம் கிடைக்காது, எனவே தேவைக்கு ஏற்ப சிமெண்ட் கலவையை பரப்பி லூனி டைல்ஸை பதிக்கலாம்..

டைல்ஸ் பதிக்கும்போது டைல்ஸ்-ன் மீது நடப்பதை தவிர்க்க, டைல்ஸ் பதிக்கும் வேலையை சுவர் ஓரங்களில் தொடங்கி கதவு அமைந்துள்ள இடத்தில் முடிக்கும் வண்ணம் செய்யவும். டைல்ஸ் பதிக்கப்பட்ட மறுநாள் காலை டைல்ஸ்-களின் மீது காலணிகள் இல்லாமல் நடந்து பார்த்து, பிடிமானம் இல்லாத டைல்ஸ்-ஐ எடுத்துவிட்டு மீண்டும் சரியாக பிடிமானத்துடன் பதிக்க வேண்டும்..

ஸ்கர்ட்டிங்க்கு தேவையான டைல்ஸ்- ஐ சரி பாதியாக கட்டிங் மெஷின் கொண்டு கட் செய்து கொள்ளவும். இதற்கு 1 பங்கு சிமெண்ட் 3 பங்கு மணல் அல்லது M – Sand தேவைக்கேற்ப வாட்டர் புரூஃப் லிக்விட் கண்டிப்பாக சேர்த்து கலவையை தயாரித்து 45 டிகிரி கோணத்தில் கைப்பிடி சுவற்றில் (Parapet Wall) ஸ்கர்டிங் டைல்ஸை பதிக்க வேண்டும்..

டைல்ஸ்-ன் இடைவெளிக்கு 1:1:1 எனும் விகிதத்தில், அதாவது 1 பங்கு ஒயிட் சிமெண்ட், 1 பங்கு கோலமாவு, 1 பங்கு தண்ணீர் மற்றும் தேவையான அளவு வாட்டர் புரூஃப் லிக்விட் கண்டிப்பாக சேர்த்து கூழ் போன்ற திடத்தில் (Paint Consistency) கலவையைத் தயாரித்து பதிக்கப்பட்ட டைல்ஸ்-ன் இடைவெளியில் சீராக நிரப்பவேண்டும். அதிகப்படியான கலவையை மர்கஷ் தகடு கொண்டு லெவல் செய்து சுத்தம் செய்துவிடவும். தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு, மேல் பரப்பு முழுவதும் காலையும் மாலையும் தண்ணீரை தெளிக்க வேண்டும்.

a.நம்ம லூனி டைல்ஸ் - ஐ பதிக்கும் முன் கண்டிப்பாக வாட்டர் புரூஃப் கோட்டிங் செய்து நீர்க் கசிவைத் தடுத்து, மழை நீர் வாட்டத்திற்காக கிரானோ தளம் அமைத்து, அதன் மீது கலவையை பரப்பி, 8mm spacer பயன்படுத்தி சீராக இடைவெளி விட்டு, மாற்று எசையில் (Break Joint) லூனி கூலிங் டைல்ஸ் பதிக்க வேண்டும்.

b.மிக முக்கியமாக கிரானோ தள கலவை, டைல்ஸ் பதிக்கும் கலவை மற்றும் சிமெண்ட் பால் ஆகியவற்றில் வாட்டர் புரூஃப் லிக்விட்-ஐ தேவையான அளவு கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும்..

c.பொதுவாக டைல்ஸ் பதிக்கும் வேலையை தோராயமாக 120 சதுர அடி முதல் 150 சதுர அடிக்கு மட்டும் கலவையை பரப்பி பதிக்க வேண்டும். அதிக பரப்பளவில் கலவையை பரப்பினால் வெகு எளிதில் கலவையானது காய்ந்துவிட்டால், டைல்ஸ் பதிக்கும் போது பிடிமானம் கிடைக்காது. எனவே தேவைக்கு ஏற்ப சிமெண்ட் கலவையை பரப்பி லூனி டைல்ஸை பதிக்கலாம்.

d.டைல்ஸ் பதிக்கும் போது பதிக்கும் நபர் டைல்ஸின் மேல் உட்கார்ந்து பதிப்பதினால் அவருடைய எடை காரணமாக டைல்ஸ் அமைப்பு சீராக அமையாது. டைல்ஸ் ஏற்ற இறக்கமாக அமைய வாய்ப்பு உள்ளது எனவே டைல்ஸ்-ன் மேல் உட்கார்ந்து பதிப்பதையும், செட்டிங் ஆகும் வரை நடப்பதையும், தவிர்த்தல் நல்லது.

e.டைல்ஸ் பதிக்கும் வேலையை, ஒரே நேரத்தில் இரண்டு நபர்கள் எதிரெதிர் திசையில் டைல்ஸ்களை பதித்துக் கொண்டு வந்தால் அதாவது, முதல் நபர் வலது புறமாகவும், அதே வரிசையில் இரண்டாவது நபர் எதிர் புறமாக டைல்ஸ் பதிக்கும் வேலையை தொடங்கினால், இருவரும் நடுவில் வரும் பொழுது டைல்ஸ்-ஐ கட் செய்து போடுவதற்கு வாய்ப்பு உள்ளது. இம்முறையை தவிர்த்து, ஒரே புறம் தொடங்கி மறுபுறம் முடியும் வண்ணம் லூனி டைல்ஸை பதிக்க வேண்டும்.

f.ஒவ்வொருநாளும் டைல்ஸ் பதித்ததும் காலையும் மாலையும் அதன் மேற்பரப்பில் தண்ணீரினால் க்யூரிங் (Curing) செய்ய வேண்டும்.

லூனி டைல்ஸை கையாளும்போது, செங்குத்தாக (Vertical Manner) தான் அடுக்க வேண்டும். படுக்கை வாட்டத்தில் அதிகப்படியான Box- ஐ வைக்கும் பொழுது, அடியில் இருக்கும் பெட்டியில் உள்ள டைல்ஸ் சேதமடைய வாய்ப்புள்ளது. எனவே டைல்ஸ்-ன் சேதத்தை தவிர்ப்பதற்கு லூனி டைல்ஸை மாற்றி அடுக்கும் போதும் ஒன்றன் மீது ஒன்றாக செங்குத்தாக தான் (Vertical Manner) அடுக்க வேண்டும். .



நமது வாடிக்கையாளர்களின் சந்தேகங்களும், அதற்கான விளக்கங்களும்...

தேவைக்கேற்ப மூன்று விதமான முறைகளில் பொறியாளர் ஆலோசனையின்படி பதிக்கலாம்.

1. பொறியாளர் ஆலோசனையின்படி உங்கள் வீட்டின் அஸ்திவாரம் நன்றாகவும், மழைநீர் கசிவு இல்லாமல் இருக்கும் பட்சத்தில் சிவப்பு ஓடுக்கு மேலேயே கூலிங் டைல்ஸ் பதிக்கலாம்.

2. அஸ்திவாரம் (Basement) எந்த அளவுக்கு strong-அ இருக்கிறது, என்ற சந்தேகம் எழும் பட்சத்தில் Weathering course மேலே இருக்கும் ரெட் clay டைல்ஸ்-ஐ மட்டும் எடுத்து வெதரிங்கோர்ஸ் நன்றாக இருக்கும் பட்சத்தில் கூலிங் டைல்ஸ்- ஐ பதிக்கலாம்.

3. மழைநீர் கசிவு இருந்தாலோ, அல்லது Red clay டைல்ஸ்-ஐ எடுக்கும் போது வெதரிங் கோர்ஸ் உதிரியாக வரும் பட்சத்தில் கண்டிப்பாக மதர் ரூஃப் வரை பழைய டைல்ஸ் மற்றும் வெதரிங் கோர்ஸ், முற்றிலும் எடுத்து விட்டு, மேலும் கைப்பிடி சுவற்றில் கீழ் இருந்து மேல் 8 இன்ச் வரை கட் செய்து, செங்கல் மறையும் அளவுக்கு சிறிதளவு சிமெண்ட் கலவையை பூசி, நன்றாக சுத்தம் செய்த பிறகு இரண்டு வாட்டர் புரூஃப் கோட்டிங் செய்யவேண்டும். பிறகு குறைந்தது 15 நாள் வரை நீரைத் தேக்கி நீர்க்கசிவு இல்லை என்பதை உறுதி செய்த பிறகு மழைநீர் வாட்டம், அமைத்து அதன் மீது கலவையை பரப்பி கூலிங் டைல்ஸ் பதிக்க வேண்டும். பொதுவாக பொறியாளர் ஆலோசனை வழங்குவது மதர் ரூஃப் வரை (பழைய டைல்ஸ், வெதரிங் கோர்ஸ், அல்லது மழை நீர் வாட்டம்) முற்றிலும் எடுத்து விட்டு இரண்டு வாட்டர் புரூஃப் கோட்டிங் செய்து பிறகு குறைந்தது 15 நாள் வரை நீரைத் தேக்கி நீர்க்கசிவு இல்லை என்பதை உறுதி செய்த பிறகு மழைநீர் வாட்டம், அமைத்து அதன் மீது கலவையை பரப்பி கூலிங் டைல்ஸ் பதிக்க வேண்டும்.

சிகப்பு டைல்ஸ் பதிப்பதற்குதான் மொட்டை மாடி முழுவதும் செங்கல் ஜல்லி, சுண்ணாம்பு பரப்பி வெதரிங் கோர்ஸ் (weathering course) தேவைப்படும். அதை சரிவர செய்வதற்கு தற்போது ஆட்கள் கிடைப்பதில்லை. அதே கூலிங் டைல்ஸ் பதிக்க Weathering course அவசியம் இல்லை. மழைநீர் வாட்டத்திற்கு ஒரு இன்ச் கனத்திற்கு மேல் கலவை கனம் தேவைப்படும் இடத்திற்கு மட்டும் சிப்ஸ் காங்கிரீட் (Grono florinnng) மூலமாக வாட்டம் கொடுத்து பதிப்பதால், சிகப்பு டைல்ஸ் ஒப்பிடுகையில் லூனி கூலிங் டைல்ஸ் பதித்தால்மொட்டைமாடியின் அதிக எடையை குறைத்து, பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்த முடிகிறது. ஆகையால் கூலிங் டைல்ஸ்க்கு தனியாக weathering course பயன்படுத்த தேவையில்லை.

மொட்டை மாடி டைல்ஸ் பதிக்கும் முன்பு ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் நாம் சொல்வது waterproof coating அவசியம் செய்ய வேண்டும். Waterproof coating என்பது மிகவும் கடினமான வேலை கிடையாது. மொட்டைமாடியில் பூச்சுக்காரையை தட்டி சுத்தம் செய்துவிட்டு தண்ணீர் ஊற்றி அல்லது Air blower மூலமாக நன்றாக சுத்தம் செய்த பிறகு 1:1 விகிதத்தில் Waterproof compound 1 பங்கு, Grey சிமெண்ட் 1 பங்கு என இரண்டையும் Paint பதத்திற்கு கலந்து அதை மொட்டைமாடியில் குறுக்கும், நெடுக்குமாக பெயிண்ட் பிரஸ் மூலமாக இரண்டு கோட்டிங் அடிக்க வேண்டும். அதாவது முதல் கோட்டிங் (Vertical manner) -ல் குறுக்காக அடிக்கும் பட்சத்தில், அது நன்றாக காய்ந்த பின், இரண்டாவது கோட்டிங் நெடுக்காக opposite direction-ல் (Horizontal manner) -ல் ஒரு கோட்டிங் செய்ய வேண்டும். Waterproof coating என்பது மேலே ஒரு Enamel போல பாதுகாத்து நீர்க்கசிவை தடுக்க பயன்படும். எனவே கண்டிப்பாக உங்களுடைய வீட்டில் கூலிங் டைல்ஸ் பதிப்பதற்கு முன் மொட்டை மாடியில் waterproof coating இரண்டு கோட்டிங் அடித்து 5 முதல் 7 நாட்கள் தண்ணீரை நிரப்பி நீர்க்கசிவு இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னரே கூலிங் டைல்ஸ் பதிக்க வேண்டும்.

பல வாடிக்கையாளர்கள் கேட்கிறார்கள். வெதரிங் கோர்ஸ் போட்டுவிட்டோம், கூலிங் டைல்ஸ் பதிக்கலாமா என்று? தவறில்லை, வெதரிங் கோர்ஸ் நன்றாகவும், நீர்க்கசிவு இல்லாத பட்சத்தில் கலவையை பரப்பி கூலிங் டைல்ஸ் பதிக்கலாம். டைல்ஸ் பதிக்கும் கலவை சிமெண்ட் பால் மற்றும் கிரவுட்டில் (Grout material) வாட்டர் புரூஃப் லிக்யூட் தேவையான அளவு கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு சிப்ஸ் காங்கிரேட் தேவைப்படாது, ஏனென்றால் வெதரிங் கோர்ஸ் அமைக்கும் போதே மழைநீர் வாட்டம் கொடுக்கப்பட்டிருக்கும்.

கைப்பிடி சுவற்றில் கீழ் இருந்து மேல் 9 இன்ச் வரை கட் செய்து, செங்கல் மறையும் அளவுக்கு சிறிதளவு சிமெண்ட் கலவையை பூசி, நன்றாக சுத்தம் செய்த பிறகு இரண்டு வாட்டர் புரூஃப் கோட்டிங் குறுக்கும் நெடுக்குமாக (Horizontal + Vertical) செய்து குறைந்தது 15 நாள் வரை நீரைத் தேக்கி நீர்க்கசிவு இல்லை என்பதை உறுதி செய்த பிறகு எங்கு வாட்டம் தேவையோ அங்கு மட்டும் மழைநீர் வாட்டம் அமைத்து கூலிங் டைல்ஸ் பதிக்க வேண்டும். டைல்ஸ் பதிக்கும் அடித்தள கலவை மற்றும் சிமெண்ட் பால் ஆகியவற்றில் வாட்டர் புரூஃப் லிக்யூட் தேவையான அளவு கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

லூனி கூல் ரூப் டைல்ஸ் ஏன் வெள்ளை நிறத்தில் தயாரிக்கப்படுகிறது வேறுதுவும் நிறத்தில் தயாரிக்கப்படுகிறதா என பல வாடிக்கையாளர்கள் கேட்கின்றனர். வெப்பத்தை அதிகமாக பிரதிபலிக்கும் திறன் வெள்ளை நிறத்தில் தான் அதிகம் உள்ளது, வெள்ளை நிறம் தவிர எந்த நிறம் பயன்படுத்தினாலும் வெப்பமானது உள்வாங்க அதிக வாய்ப்புள்ளது. ஆகையால் தான் நம் லூனி கூல் ரூப் டைல்ஸ் இயற்கையாக கிடைக்கும் வெள்ளை நிற மூல பொருட்களால் வெள்ளை நிறத்தில் தயாரிக்கப்படுகிறது

A.கூல் ரூஃப் டைல்ஸ் பதிப்பதினால் வெப்பம் பிரதிபலிக்கப்பட்டு வீட்டுக்குள் வெப்பத்தின் தாக்கம் ரூஃப் மூலமாக வருவதை தடுத்து சாதாரண சீதோஷன நிலையை தக்க வைக்கிறது.

B.மேலும் கூலிங் டைல்ஸ் ஒட்டுமொத்த செயல்முறை-ல் (Overall process) எடை குறைக்கலாம், அதாவது சிவப்பு டைல்ஸ் பதிப்பதற்கு Weathering course அமைக்கவேண்டும் கூலிங் டைல்ஸ் பதிப்பதற்கு Weathering course தவிர்த்து எங்கு வாட்டம் தேவையோ அங்கு மட்டும் வாட்டம் கொடுத்து பதிப்பதால் ஒட்டுமொத்த எடையில் 15% வரைக்கும் குறைகிறது.

C.மூன்றாவது கூல் ரூஃப் டைல்ஸ் பதிப்பது Economical, எப்படி என்றால் Weathering course எங்கு வாட்டம் தேவையோ அதாவது வாட்டம் அமைக்க புல் வைத்து ஒரு இன்ச் கனத்திற்கு மேல் கலவை கனம் தேவைப்படும் இடத்திற்கு மட்டும் கிரானோ தளம் மூலமாக வாட்டம் கொடுத்து பதிப்பதால், சிகப்பு டைல்ஸ் ஒப்பிடுகையில் லூனி கூலிங் டைல்ஸ் பதிப்பதால் ஒரு சதுரடிக்கு குறைந்தது 10 ரூபாய் வரை கண்டிப்பாக குறையும். இதனை Calculator என்ற கணக்கீடு மூலம் ஒப்பிட்டு பார்க்கலாம். இதன் மூலம் ரூஃப் -ன் அதிக சுமையை குறைத்து, பல்வேறு வகையில் பணத்தையும் நேரத்தையும், சேமிக்கலாம்.

கூலிங் டைல்ஸ் பதிக்கும்போது கவனிக்க வேண்டியவைகள்,

A.டைல்ஸ்-ஐ வாகனத்திலிருந்து எப்படி செங்குத்தாக இறக்கி வைக்கின்றார்களோ அதே போல மொட்டைமாடியிலும் செங்குத்தாக box-ஐ அடுக்கி வைக்க வேண்டும்,

B.Waterproof coating செய்து நீர்க்கசிவு இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே டைல்ஸ்களை பதிக்கும் வேலையை தொடங்க வேண்டும்.

C.டைல்ஸ் பதிக்கும்போது 8mm spacer பயன்படுத்தி break joint method-ல் பதிக்க வேண்டும்.

D.ஒவ்வொருநாளும் டைல்ஸ் பதித்ததும் காலையும் மாலையும் அதன் மேல்பரப்பில் தண்ணீரினால் curing செய்ய வேண்டும்.

E.டைல்ஸ் பதித்த பின்னர் Grout material apply செய்வதற்கு முன் டைல்ஸ்களின் மேலே நடந்து பார்த்து பிடிமானம் இல்லாத டைல்ஸ் இருந்தால் அதை எடுத்துவிட்டு மீண்டும் பதிக்க மேஸ்திரியிடம் தெரிவிக்க வேண்டும்.

F.முக்கியமாக grout material-ல் Waterproof compound தேவைக்கேற்ப கலந்து semi solid ஆக கூழ் போல கலந்து டைல்ஸ்களின் இடைவெளியில் நிரப்புவதை உறுதிசெய்யவேண்டும்.

A.மொட்டை மாடியில் லூனி டைல்ஸ்- ஐ இடம்மாற்றி அடுக்கும் போது கண்டிப்பாக படுக்கை வாட்டத்தில் அடுக்ககூடாது செங்குத்தாக தான் வைக்க வேண்டும். ஒருவேளை படுக்கை வாட்டத்தில் வைத்தால் (Gravity base) புவியீர்ப்பு அடிப்படையில் கீழே உள்ள box -ல் இருக்கும் டைல்ஸ் சேதமடைய அதிகமாக வாய்ப்புள்ளது.

B.லூனி டைல்ஸ் பதிப்பதற்கு வாட்டர்புரூஃப் கோட்டிங் செய்யாமல் டைல்ஸ் –ஐ பதிக்க கூடாது. ஒருவேளை வாட்டர் புரூஃப் செய்யாமல் டைல்ஸ்-ஐ பதித்தால் நாளைடைவில் நீர்க்கசிவு ஏற்பட்டால் அதை விட பெரிய மனஉலைச்சல் வேறு எதுவும் கிடையாது. அதனால் வாட்டர்புரூஃப் கோட்டிங் செய்து கூல் ரூஃப் டைல்ஸ் பதிப்பது மிகவும் நல்லது.

C. அதேபோல் கூலிங் டைல்ஸ் பதிக்கும் போது இடைவெளி விடாமல் பதிக்க கூடாது. குறைந்தபச்சம் 5 முதல் 8mm வரை இடைவெளி விட வேண்டும். 2 அல்லது 3 mm இடைவெளி விட்டு பதித்தால் டைல்ஸ்-ன் இடைவெளியில் கிரவுட் முழுமையாக நிறையாது, இது பின்நாளில் ஜல்லி வேர் போன்ற வெடிப்பு (Cracks) வர வாய்ப்புள்ளது.

D.கூல் ரூஃப் டைல்ஸ் பதித்ததற்கு பிறகு டைல்ஸ் செட்டிங் ஆகும் வரை அதன் மேல் நடப்பதை தவிர்க்கவும். ஏன்னென்றால், சிமென்ட் கலவையில் டைல்ஸ் பிடிமானம் ஆகாமல் நடக்கும் பொழுது நம் எடை காரணமாக ஏற்படும் அதிர்வுகளால் ஏற்ற இறக்கமாகி சீரான அமைப்பில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

E.Grout material - ஐ கூழ் பதத்திற்கு கரைத்து அதில் அவசியம் வாட்டர் புரூஃப் Compound சேர்த்து பயன்படுத்துவது நல்லது.

மழைநீர் கசிவு இருந்தால் கண்டிப்பாக மதர் ரூப் வரை கொத்தி எல்லாத்தையும் எடுத்து விட்டு இரண்டு வாட்டர் புரூஃப் கோட்டிங் செய்து பிறகு குறைந்தது 15 நாள் வரை நீரைத் தேக்கி நீர்க்கசிவு இல்லை என்பதை உறுதி செய்த பிறகு மழைநீர் வாட்டம் அமைத்து அதன் மீது கலவையை பரப்பி கூலிங் டைல்ஸ் பதிக்க வேண்டும். டைல்ஸ் பதிக்கும் அடித்தள கலவை மற்றும் சிமெண்ட் பால் ஆகியவற்றில் வாட்டர் புரூஃப் லிக்யூட் தேவையான அளவு கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

புது வீட்டிற்கு கூலிங் டைல்ஸ் பதிக்கும் - வாடிக்கையாளர் கவனத்திற்கு இரண்டு வாட்டர் புரூஃப் கோட்டிங் குறுக்கும் நெடுக்குமாக (Horizontal + Vertical) செய்து குறைந்தது ஏழு நாள் வரை நீரைத் தேக்கி நீர்க்கசிவு இல்லை என்பதை உறுதி செய்த பிறகு மழைநீர் வாட்டம் அமைத்து, அதன் மீது கலவையை பரப்பி கூலிங் டைல்ஸ் பதிக்க வேண்டும்.

இதே சில வருடங்கள் ஆன வீடு, உதாரணத்திற்கு 3, அல்லது 5 வருட வீடு, எந்த ஒரு மொட்டை மாடி டைல்ஸ்-ம் போடவில்லை, மாற்றாக சிமெண்ட் தரை மட்டும் அமைத்த வாடிக்கையாளர் கவனத்திற்கு நீர்க்கசிவு இல்லாத பட்சத்தில் …புள்ளி போட்டு சுத்தம் செய்துவிட்டு மழைநீர் வாட்டம் அமைத்து, அதன் மீது கலவையை பரப்பி கூலிங் டைல்ஸ் பதிக்கலாம். டைல்ஸ் பதிக்கும் அடித்தள கலவை மற்றும் சிமெண்ட் பால் ஆகியவற்றில் வாட்டர் புரூஃப் லிக்விட்யை தேவையான அளவு கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

சிவப்பு ஓடு போட்டு சில, பல வருடங்கள் ஆன வீடு, அல்லது ஹீட் அதிகமா இருக்கு அதனால கூலிங் டைல்ஸ் பதிக்கனும்… இதுபோன்ற வாடிக்கையாளர் கவனத்திற்கு நீர்க்கசிவு இல்லாத பட்சத்தில் பழைய சிவப்பு ஓட்டை வெதரிங் கோர்ஸ் வரை பெயர்த்து எடுத்துவிட்டு, அடியில் இருக்கும் வெதரிங் கோர்ஸ் நன்றாக இருக்கும் பட்சத்தில் அதன் மீது கலவையை பரப்பி கூலிங் டைல்ஸ் பதிக்கலாம். டைல்ஸ் பதிக்கும் அடித்தள கலவை மற்றும் சிமெண்ட் பால் ஆகியவற்றில் வாட்டர் புரூஃப் லிக்விட்யை தேவையான அளவு கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அதே சிகப்பு ஓட்டை பெயர்த்து எடுக்கும்போது வெதரிங் கோர்ஸ் பொலபொலவென்று உதிரியாக வரும் பட்சத்தில் மதர் ரூப் வரை கொத்தி அனைத்தையும் எடுத்து விட்டு, இரண்டு வாட்டர் புரூஃப் கோட்டிங் செய்து பிறகு குறைந்தது 7 முதல் 10 நாள் வரை நீரைத் தேக்கி, நீர்க்கசிவு-இல்லை என்பதை உறுதி செய்த பிறகு மழைநீர் வாட்டம் அமைத்து, அதன் மீது கலவையை பரப்பி கூலிங் டைல்ஸ் பதிக்க வேண்டும். டைல்ஸ் பதிக்கும் அடித்தள கலவை மற்றும் சிமெண்ட் பால் ஆகியவற்றில் வாட்டர் புரூஃப் லிக்யூட் தேவையான அளவு கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மதர் ரூஃப் வரை கொத்தி எல்லாத்தையும் எடுத்து விட்டு கைப்பிடி சுவற்றில் கீழ் இருந்து மேல் 9 இன்ச் வரை கட் செய்து, செங்கல் மறையும் அளவுக்கு சிறிதளவு சிமெண்ட் கலவையை பூசி, நன்றாக சுத்தம் செய்த பிறகு, இரண்டு வாட்டர் புரூஃப் கோட்டிங் செய்து குறைந்தது 15 நாள் வரை நீரைத் தேக்கி நீர்க்கசிவு இல்லை என்பதை உறுதி செய்த பிறகு மழைநீர் வாட்டம் அமைத்து அதன் மீது கலவையை பரப்பி கூலிங் டைல்ஸ் பதிக்க வேண்டும். டைல்ஸ் பதிக்கும் அடித்தள கலவை மற்றும் சிமெண்ட் பால் ஆகியவற்றில் வாட்டர் புரூஃப் லிக்யூட் தேவையான அளவு கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

நீர்க்கசிவு இல்லாத பட்சத்தில் பழைய சிவப்பு ஓட்டை வெதரிங் கோர்ஸ் வரை பேத்து எடுத்துவிட்டு, அடியில் இருக்கும் வெதரிங் கோர்ஸ் நன்றாக இருக்கும் பட்சத்தில் அதன் மீது கலவையை பரப்பி கூலிங் டைல்ஸ் பதிக்கலாம். டைல்ஸ் பதிக்கும் அடித்தள கலவை மற்றும் சிமெண்ட் பால் ஆகியவற்றில் வாட்டர் புரூஃப் லிக்யூடை தேவையான அளவு கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும். அதே சிகப்பு ஓட்டை பேத்து எடுக்கும்போது வெதரிங் கோர்ஸ் பொலபொலவென்று உதிரியாக வரும் பட்சத்தில் மதர் ரூஃப் வரை கொத்தி அனைத்தையும் எடுத்து விட்டு, இரண்டு வாட்டர் புரூஃப் கோட்டிங் செய்து பிறகு குறைந்தது 10 முதல் 15 நாள் வரை நீரைத் தேக்கி, நீர்க்கசிவு-இல்லை என்பதை உறுதி செய்த பிறகு மழைநீர் வாட்டம் அமைத்து, அதன் மீது கலவையை பரப்பி கூலிங் டைல்ஸ் பதிக்க வேண்டும். டைல்ஸ் பதிக்கும் கலவை மற்றும் சிமெண்ட் பால் ஆகியவற்றில் வாட்டர் புரூஃப் லிக்யூட் தேவையான அளவு கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பொதுவாக 2mm, 3mm இடைவெளி விட்டால் பார்க்க நன்றாக இருக்கும் என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். அது வீட்டின் உட்புற Floor Tiles-ல் 2mm, 3mm இடைவெளி அல்லது இடைவெளி இல்லாமல் நேர் வரிசையில் பதிக்க எந்த பிரச்சனையும் இருக்காது. என்ன காரணம் என்றால் வீட்டினுள் சூரிய வெளிச்சம் வருவதற்கு வாய்ப்பில்லை, யாரும் இந்த காலகட்டத்தில் தண்ணீர் ஊற்றி கழுவுவதில்லை பொதுவாக மாப் போட்டு வீட்டை சுத்தம் செய்கிறோம். ஆனால் மொட்டை மாடியில் அவ்வாறாக இல்லை, மழை மற்றும் வெயில் என்று பலவிதமான இயற்கை சூழலை மொட்டைமாடி சந்திப்பதினால் 8mm இடைவெளி விட்டு பதித்து, அதில் கிரவுட் மெட்டிரியல் நன்றாக கூழ் போன்ற பதத்தில் திடமாக நிரப்புவதினால் டைல்ஸ் - க்கு நல்ல பிடிமானம் கிடைக்கும். பிற்காலத்தில் டைல்ஸில் வெடிப்பு மற்றும் பேத்துக் கொள்ளுதல் போன்ற பாதிப்புகளையும் தவிர்க்கலாம். இந்த மாதிரி நம்ம லூனி டைல்ஸ் - ஐ பதிக்கும் முன் கண்டிப்பாக வாட்டர் புரூஃப் கோட்டிங் செய்து நீர்க் கசிவைத் தடுத்து கிரானோ தளம் அமைத்து, அதன் மீது கலவையை பரப்பி, 8mm இடைவெளி விட்டு மாற்று எசையில் (Break Joint) லூனி கூலிங் டைல்ஸ் பதிக்க வேண்டும்.

நம் வாடிக்கையாளர்கள் பலர் இந்த கேள்வியை கேட்கிறார்கள். வீட்டுக்குள் டைல்ஸ் ஒட்டும் போது நேர் எசையில் பதிக்கலாம். நேர் எசை என்பது செஸ் போர்டு போல நேர் வரிசையில் பதிப்பதாகும்.

மாற்று எசை என்பது டைல்ஸ் பதிக்கும் முதல் வரிசையில் முதல் டைல்ஸ் முழு டைல்ஸ்-ஆக பதித்து தொடர்ந்து முழு டைல்ஸ்-ஆக பதிக்கப்பட வேண்டும்.

இரண்டாவது வரிசையில் முதல் டைல்ஸ் – ஐ மட்டும் இரண்டு சரி பாதியாக கட் செய்து, ஒரு பாதி டைல்ஸ் -ஐ பதித்து பின் முழு டைல்ஸ்-ஆக தொடர்ந்து பதிக்கப்பட வேண்டும்.இம்முறையில் அடுத்த அடுத்த வரிசையில் பதிப்பதே மாற்று எசை என்பதாகும். இவ்வாறு மாற்று எசையில் பதிப்பதினால் வாட்டம் அமைப்பதற்கு இலகுவாக இருக்கும். அதே போல் எதிர்பாராத விதமாக நாளடைவில் ஏதேனும் ஒரு டைல்ஸ்-ல் வெடிப்பு வந்தாலும் மாற்று எசையில் பதிப்பதினால் வெடிப்பின் தொடர்ச்சி தடுக்கப்படும்.

மொட்டைமாடியை பொறுத்தவரை break joint method-ல் பதிப்பது நல்லது. முதல் வரிசையில் டைல்ஸ்களை முழுமையாகவும் இரண்டாவது வரிசையில் முதல் டைல்ஸ்-ஐ பாதியாக CUT செய்து பதிக்கவேண்டும். அதைத்தொடர்ந்து முழு டைல்ஸ்களை பதிப்பதுதான் break joint method. Break joint method- ஐ பொறுத்தவரைக்கும் வாட்டம் என்பது சரியாக கிடைக்கும். இரண்டாவது எதாவது ஒரு டைல்ஸ்-ல் Crack வந்தால் மற்ற டைல்ஸ்களுக்கு பரவுவதை முற்றிலும் தடுக்கும். வீட்டுக்குள் straight joint method-ல் பதிக்கலாம் பிரச்சனை கிடையாது, ஏனென்றால் வீட்டுக்குள் மழையோ வெயிலோ வரப்போவதில்லை. ஆனால் மொட்டைமாடி அப்படி கிடையாது எல்லா கால நிலைகளையும் சமாளிக்க வேண்டியிருக்கும். ஆகையால் மொட்டை மாடியை பொறுத்தவரை break joint method-ல் பதிப்பது சால சிறந்தது.

கூல் ரூஃப் டைல்ஸ் பதிக்கும்போது வீட்டின் முன் புறம் மழைநீர் வடிகால் குழாய் அமைத்தால் முகத்தோற்றம் (Elevation) பாதிக்கும் என்ற எண்ணத்தில் அழகுக்காக ஒரே புறமாக மழைநீர் வாட்டம் அமைத்து வடிகால் குழாய் வைக்கும்போது, உதாரணத்திற்கு 1000 சதுர அடி கொண்ட மொட்டைமாடியில் மழை காலங்களில் பெய்யும் அனைத்து தண்ணீரும் ஒரே புறமாக வாட்டத்தில் ஓடி ஒரு வடிகால் குழாய் வந்துசேரும் மழைநீரானது விரைவாக வடிந்து செல்லாது. மொட்டைமாடியிலேயே தேங்கி நாளடைவில் நீர்க்கசிவு போன்ற பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே நீளம் அதிகம் உள்ள பக்கத்தை பகுதியாக மையத்திலிருந்து எதிர் எதிர் திசைகளில் இரண்டு வாட்டங்கள் அமைத்து ஒன்றுக்கும் மேற்பட்ட மழைநீர் வடிகால் குழாய் அமைக்கும் போது சுலபமாக மழைநீர் வெளியேறும். இதனால் மழைநீர் தேங்கி நீர்க்கசிவு ஏற்படாமல் தடுக்க முடியும். மேலும் இவ்வாறு பரப்பளவிற்கு தகுந்தாற்போல எண்ணிக்கையில் ஒன்றிற்கு மேற்பட்ட மழைநீர் வடிகால் குழாய் (Rain Water Drain Pipe) அமைத்து வாட்டம் அமைப்பதினால் கட்டுமான பொருட்களின் அளவு (Filling material Quantity) குறைவதால் மேல்தளத்தின் அதிக சுமை குறைவதோடு 15% வரை பணத்தை மிச்சப்படுத்தலாம்.

பொதுவாக 20mm Thickness இருந்தால் அதிக குளிர்ச்சியாகவும், 15mm thickness கொண்ட கூலிங் டைல்ஸ் குறைவாக குளிர்ச்சியையும் தருவதாகவும் சில வாடிக்கையாளர்கள் வேடிக்கையாக கேட்கிறார்கள். அந்த மாதிரி கிடையாது. என்ன காரணம் என்றால் மிக முக்கியமாக மொட்டைமாடியில் தேவையில்லாமல் அதிக சுமையை தவிர்க்கதான் கூலிங் டைல்ஸ் பதிக்கின்றோம். எந்த மொட்டைமாடி டைல்ஸ் பதித்தாலும் வாட்டத்திற்காகவும், டைல்ஸ் பதிக்க கலவையின் அளவு, அதன் எடை என பொதுவாக இருந்தாலும், உதாரணத்திற்கு லுனி டைல்ஸ்-ஐ ஒப்பிடுகையில், 10*10 இன்ச் 15mm thickness-ல் பதிக்கும்போது ஒரு டைல்ஸ்-ன் எடை 2.1 கிலோ இருக்கும் பட்சத்தில் உதாரணத்திற்கு 1000 சதுர அடிக்கு 1500 டைல்ஸ் (ஸ்கர்ட்டிங் டைல்ஸ் உட்பட) பதிக்கும் போது டைல்ஸ்-ன் எடை மட்டும் கிட்டதட்ட 3100 கிலோ (3.1 TON) வரை இருக்கும். இதே ஒரு 12*12 இன்ச் 20mm thickness டைல்ஸ் பதித்தால் ஒரு டைல்ஸ்-ன் எடை 4.300 கிலோ இருக்கும் பட்சத்தில் அதனுடைய எடை மட்டும் 4.3 டன் வரை இருக்கும். கனம் அதிகரிப்பதால் தேவையற்ற சுமைதான். 12 இன்ச் X 12 இன்ச் 20 mm கனம் கொண்ட டைல்ஸ் பதிப்பதை விட 10 இன்ச் X 10 இன்ச் 15 mm கனம் கொண்ட கூலிங் டைல்ஸ் பதித்தால் தோராயமாக 1300 கிலோ (1.3 TON) எடையினால் ஏற்படும் தேவையற்ற சுமையை குறைப்பது நல்லது. ஆகையால் வீட்டின் மொட்டைமாடியின் ஒட்டுமொத்த எடையை குறைத்து 15mm கொண்ட தரமான லுனி கூலிங் டைல்ஸ்களை பதித்து பயன்பெறுவதே சிறந்தது.

கூல் ரூஃப் டைல்ஸ்களில் Hairline crack வரக்காரணம், கீழே Ground floor-ல் டைல்ஸ் box -களை இறக்கி வைக்கும்போது செங்குத்தாக ஆக (Vertical) வைக்கப்படுகிறது. அதை மொட்டைமாடியில் கொண்டுபோய் வைக்கும் போதும், அவ்வாறே செங்குத்தாக (Vertical manner) அடுக்க வேண்டும். உதாரணத்திற்கு Horizontal manner-ல் நான்கு ஐந்து Box-களை வைத்தால் கீழுள்ள டைல்ஸ் பாக்ஸ் அதன் மேலுள்ள டைல்ஸ் பாக்ஸ்-ன் புவியீர்ப்பு விசையினால் (Gravity) உடைவதற்கு அதிக வாய்ப்புள்ளது, பதிக்கும்பொழுது தெரியாது நாளடைவில் தெரிய வாய்ப்புள்ளது. பிடிமானம் இல்லாத டைல்ஸ்-ஐ சரியாக கவனிக்காமல் அதில் Grouting material நிரப்பினாலும் அதில் Hairline crack வர வாய்ப்புள்ளது. மிக முக்கியமாக இடைவெளி குறைவாக 2mm அல்லது 3mm விடும் போது அதில் Grout material சரிவர நிரம்பாமல் Hairline crack வர வாய்ப்புள்ளது, எனவே 8mm இடைவெளி விட்டு கூழ் பதத்தில் Grout material-ஐ Waterproof compound கலந்து நிரப்பினால் நீண்டகாலம் Hairline crack வராமல் நன்றாக இருக்கும்.

லூனி டைல்ஸ் பார்ப்பதற்கு ஷைனிங்-ஆக உள்ளது அதனால் வழுக்குமா என்று பல வாடிக்கையாளர்கள் கேட்பதுண்டு. கண்டிப்பாக லூனி டைல்ஸ் மழை பெய்தாலோ அல்லது மொட்டைமாடியை சுத்தம் செய்யும் போதோ கண்டிப்பாக வழுக்காது. இது செராமிக் டைல்ஸ் போன்று வழுக்காது. எந்த ஒரு வாடிக்கையாளரும் லூனி டைல்ஸ் பதித்த இடம் வழுக்கியதாக ஒரு புகாரும் கூறியதில்லை. மொட்டைமாடியின் பயன்பாட்டையும் வாடிக்கையாளர் நலனையும் கவனத்தில் கொண்டு தயாரிக்கப்படும் நமது லூனி கூல் ரூஃப் டைல்ஸ் எந்த ஒரு கால நிலைகளிலும் வழுக்காது.

லூனி கூல் ரூஃப் டைல்ஸ் பதித்த மாடியில் மாடித்தோட்டம் அமைக்கலாம். வீட்டுக்கு நாட்டுக்கும் அழகே செடி, கொடி, மரங்கள்தான், இயற்கையோடு இணைந்து இருப்பதே தனி சுகம். லூனி கூல் ரூஃப் டைல்ஸ் பதிக்கும்போது ஐந்து அடுக்கு பாதுகாப்புடன் அதாவது, கூலிங் டைல்ஸ் பதிக்கும் முன் இரண்டு வாட்டர் புரூஃப் கோட்டிங் (Waterproof coating) செய்து, டைல்ஸ் பதிக்கும் கலவையில், சீமெண்ட் பால் மற்றும் கிரவுட்டிங்கிலும் வாட்டர் புரூஃப் ஆயிலை சேர்த்து ஐந்து அரண்களாக கட்டிடம் பாதுகாக்கப்பட்டு நீர்க்கசிவு தடுக்கப்பட்டு கூலிங் டைல்ஸ் பதிப்பதால் எந்த ஒரு அச்சமும் இன்றி மாடித்தோட்டம் அமைக்கலாம். நமது அரசாங்கமே மாடித்தோட்டம் அமைக்க பல்வேறு வகையில் ஊக்குவிக்கிறது. ஆகையால் இக்காலத்திற்கு மாடித்தோட்டம் என்பது நாம் வாழும் சூழலுக்கு மிகவும் அவசியமான ஒன்று. நமது வீட்டில் மாடித்தோட்டம் அமைப்பதினால் ஒவ்வொருவரும் ஒரு விவசாயி தான்.

சில வாடிக்கையாளர்கள் லூனி கூலிங் டைல்ஸ் - ஐ நீரில் நனைத்து பதிக்க வேண்டுமா? என்று கேட்கிறார்கள், பெரும்பாலும் நம்ம லூனி டைல்ஸ் - ஐ தண்ணீரில் நனைத்து பதிப்பதில்லை, நேரடியாகவே பதிக்கிறார்கள். தண்ணீரில் நனைத்து பதிப்பதினால் எந்த தவறும் கிடையாது.

Asbestos sheet-ன் மேல் கூலிங் டைல்ஸ் பதிக்கவோ தற்காலிகமாக வைக்காவோ கூடாது. ஏனெனில் ஆஸ்பெட்டாஸ் சீட் 6 mm கணம் கொண்டது. இது கூலிங் டைல்ஸ்-ன் எடையை தாங்கும் அளவுக்கு வலிமை உடையது அல்ல, பதிக்கவும் முடியாது.அதனால் நாம் Asbestos sheet மேல் கூலிங் டைல்ஸ்-ஐ கண்டிப்பாக பதிக்க கூடாது. மேலும் அஸ்பெஸ்டாஸ் சீட் பயன்படுத்தப்பட்ட இடத்தில் வெப்பத்தாக்கம் காரணமாக வெளிவரும் உஷ்ண வாயுவை தொடர்ந்து சுவாசிப்பதினால் நுரையீரல் புற்றுநோய், குரல்வளை மற்றும் கருப்பையின் புற்றுநோய் போன்ற பல நோய்கள் வர காரணமாகும் என்பதால் உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளுக்கு இதை தடை செய்ய பரிந்துரைத்துள்ளது.

White கலர் என்றாலே கரை போன்ற அழுக்குள் எளிதில் படிய வாய்ப்புள்ளது. நம் வீட்டின் உள்புறம் பராமரிப்பதை போல் மொட்டை மாடியை தினமும் நம்மால் சுத்தம் செய்ய இயலாது. எனவே கரை போன்ற அழுக்குள் இருந்தால் கூலிங் டைல்ஸ் பதித்த மாடியில் White Cement மற்றும் White Powder கொண்டு பரப்பளவிற்கு தகுந்தார்போல் உதாரணமாக 500 சதுர அடிக்கு 5 கிலோ White Cement மற்றும் 5 கிலோ ஆற்று மணல் அல்லது கோலமாவு உடன் 30 லிட்டர் தண்ணீரில் கலந்து மாடியில் தெளித்து வாருகோள் கொண்டு தேய்த்து கலவையானது காய்வதற்குள் ஒயிட் காட்டன் வேஸ்ட் மூலம் துடைத்து சுத்தம் செய்வதினால் டைல்ஸ் பதித்த முதல் நாள் கிடைத்த வெண்மை நிறத்தில் 70 முதல் 80 சதவீதம் வரை மீண்டும் கிடைக்கும்.

மேலும் சில இடங்களில் டைல்ஸின் 8mm இடைவெளியில் நிரப்பப்பட்ட கிரவுட் நீங்கி இருந்தால் இம்முறையின் மூலம் சரிசெய்துவிடலாம். இவ்வாறு குறைந்தது 2 வருடத்திற்கு ஒருமுறை பராமரிப்பதால் டைல்ஸ்-ன் மீது கறை படிவதை குறைக்கலாம்.

பிறந்தநாள் விழா போன்ற சிறு விழாக்களின் போதும் இம்முறையில் சுத்தம் செய்து பராமரிப்பதினால் சூரிய ஒளியின் வெப்பத்தை கடத்தாமல் பிரதிபலித்து வீட்டின் உட்புற வெப்பத்தாக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது.

நாம் தேசிய நெடுஞ்சாலையில் Long drive போகும் போது தொலை தூரத்தில் சாலையில் நடுவே நீர் இருப்பது போன்ற தோற்றத்தை கண்டிருப்போம். அதாவது கோடைகாலங்களில் நேரான தார் சாலையின் மேல் சூரிய ஒளி பட்டு நீர்த்தடாகம் போன்று தோற்றமளிப்பது கானல் நீர் (Mirage) என்பதாகும். அது போல் மொட்டை மாடியில் டைல்ஸ்-ன் மேல் வெப்பமானது பட்டு அது பிரதிபலித்து காற்றுடன் கலக்கும் வினையினால் கானல் நீர் போன்று கண்களை கூசுவதற்கு வாய்ப்பு உள்ளது.

இதை எதிர்மறையாக (Nagative) நினைக்க வேண்டாம். மாற்றாக உச்சி வெயில் நேரத்தில் மாடிக்கு செல்வதை தவிர்த்து, அதற்கு முன்போ பின்போ செல்லும் போது கண்கள் கூசுவதை தவிர்க்கலாம். ஏனென்றால் வீட்டின் உட்புற வெப்பம் கட்டுப்படுத்துவதுதான் மிக முக்கியமான கருதப்பட்டு கூல் ரூஃப் டைல்ஸ் பதிக்கப்படுகிறது. கூல் ரூஃப் டைல்ஸ் பதிப்பதினால் எந்த ஒரு மைனஸ்-ம் கிடையாது.

மொட்டை மாடியில் கூலிங் டைல்ஸ் பதிப்பதால் வெயில் காலங்களில் AC போன்று கூலிங் தருமா என பல வாடிக்கையாளர்கள் கேட்கிறார்கள். அவ்வாறாக AC போன்ற குளிரூட்டும் சாதனத்தை போன்று செயல்படாது. நம் வீட்டின் மொட்டை மாடியில் கூலிங் டைல்ஸ் பதிப்பதினால் சூரிய ஒளியின் வெப்பத்தை கடத்தாமல் பிரதிபலித்து வீட்டின் உட்புறம் இயல்பான சீதோசன நிலையை தக்கவைக்கிறது.

அதுபோன்றே குளிர் காலங்கள், அல்லது மழை காலங்களில், அதிக குளிர்-ஆக இருக்குமா? எவ்வாறு இருக்கும் என்று பல வாடிக்கையாளர்கள் கேட்கிறார்கள்...

கோடை வெய்யிலினை எவ்வாறு தடுக்கிறதோ அதே போன்று மழை மற்றும் குளிர்காலங்களில் வெளிப்புற சீதோசன நிலையினால் ஏற்படும் குளிர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது. ஆகவே மழைக்காலம்,வெயில்காலம் அல்லது குளிர்காலம் எந்த பருவ காலங்களிலும் கூலிங் டைல்ஸ் பதிக்கும் வீட்டில் ரூஃப் மூலமாக அதனை கட்டுப்படுத்தி வீட்டுக்குள் இயல்பான தட்பவெப்ப நிலையை பராமரிக்கின்றது.

கண்டிப்பாக மொட்டைமாடியில் கூலிங் டைல்ஸ்பதிக்கும் போது (Space) டைல்ஸ்-களுக்கு சீரான இடைவெளி விட்டு பதிக்கவேண்டும். இதனை அனைத்து வாடிக்கையாளர்களிடமும் வலியுறுத்துகிறோம். அதாவது "இடைவெளி இல்லாமல் பதித்தால் பார்ப்பதற்க்கு அழகாக இருக்கும்" என்ற எண்ணத்தில் பலர் கேட்க்கின்றனர்.

“இடைவெளி இல்லாமல் ஏன் பதிக்கக்கூடாது"?

பொதுவாக வீட்டுக்குள் நாம் எவரும் தண்ணிர் ஊற்றி சுத்தம் செய்வது இல்லை, வழக்கமாக மாப் மூலமாக மட்டுமே சுத்தம் செய்கிறோம், மற்றும் சூரிய ஒளியும் வீட்டுக்குள் பெருமளவில் வருவது இல்லை. அதனால் நம்ம வீட்டுக்குள்ள இடைவெளி இல்லாமல் கூட டைல்ஸ்-ஐ ஸ்ட்ரெயிட் ஜாயிண்ட் முறையில் பதிக்கலாம். அதனால் எந்த வித தவறும் கிடையாது. ஆனால் மொட்டைமாடியில் மழை மற்றும் வெயில்காலம் என பல்வேறு சூழல்களை சந்திக்கும் பொழுது பதிக்குற கூலிங் டைல்ஸ் நீண்ட காலத்திற்கு நீர்க்கசிவு, மற்றும் டைல்ஸ் பேத்துக் கொள்ளுதல் போன்ற எவ்வித பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க பிரேக் ஜாயிண்ட் முறையில் குறைந்தது 5mm முதல் 8mm spacer பயன்படுத்தி சீரான இடைவெளி விட்டு கிரவுட்-ஐ சரியான முறையில் பெயின்ட் திடத்தில் நிரப்பி பதித்தால் எந்த ஒரு சிக்கலும் வராது.

மொட்டை மாடியில் பொறுத்த வரை வாட்டர் புரூப் கோட்டிங் செய்துவிட்டு கூலிங் டைல்ஸ் ஒட்டுவது நல்லது. எந்த ஒரு கூலிங் டைல்ஸ் ஆக இருந்தாலும் வாட்டர் புரூப் கோட்டிங் செய்யாமல் டைல்ஸ் பதிக்க கூடாது.

ஒரு engineer நம்மிடம் பல வருடங்களாக டைல்ஸ் வாங்கி கொண்டிருக்கிறார். அவர் 10 site-க்கு மேல் நம்மிடம் கூலிங் டைல்ஸ் வாங்கி பதித்து இருக்கிறார். அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, அதில் எதுலயும் வாட்டர் புரூப் கோட் செய்யவுமில்லை, நீர்க்கசிவு பிரச்சனையும் இல்லை.

ஆனால் 11-வது பில்டிங்-ல் நீர் கசிவு பிரச்சன்னை வந்து விட்டது. அப்பொது தான் யோசிக்கிறார்கள், வாடிக்கையாளரான அந்த பில்டர் நம்மிடம் எதனால் நீர் கசிவு பிரச்சன்னை என்று கேட்டு, நாமும் அந்த பில்டிங்-ஐ பரிசோதித்து, 10 கட்டுமானம் வரை இல்லாத நீர் கசிவு பிரச்சனை, இந்த ஒரு கட்டிடத்தில் மட்டும் பிரச்சனை வந்துவிட்டது, எதனால் என நம் விளக்கத்தையும் கேட்டு வாட்டர் புரூப் கோட்டிங் செய்வது மிக அவசியம் என்று புரிந்துகொண்டார். ஏனென்றால் கூலிங் டைல்ஸ் பதித்தால் நீர்க்கசிவு போன்ற பிரச்சனையை தீர்த்துவிடும் என்ற தவறான வழிகாட்டுதலினாலோ அல்லது எண்ணத்தினாலோ, இது போன்ற விலை உயர்ந்த அனுபவத்தால் நம் வாடிக்கையாளர்கள் பாதிப்படையாமல் இருக்கவே, ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் வாட்டர் புரூப் கோட்டிங் அவசியத்தை பல வழிகளில் விளக்கி எப்படி பட்ட மொட்டை மாடியாக இருந்தலும், புதிய அல்லது பழைய கட்டிடத்தில் நீர்க்கசிவு இருக்கும் பட்சத்தில், கூலிங் டைல்ஸ் - ஐ பதிக்கும் முன் கண்டிப்பாக வாட்டர் புரூஃப் கோட்டிங் செய்து நீர்க் கசிவைத் தடுத்து கிரானோ தளம் அமைத்து, அதன் மீது கலவையை பரப்பி, 8mm இடைவெளி விட்டு மாற்று எசையில் (Break Joint) கூலிங் டைல்ஸ் பதிக்க வேண்டும். எந்த ஒரு கூலிங் டைல்ஸ் ஆக இருந்தாலும் அது சூரிய ஒளியின் வெப்பத்தை கடத்தாமல் பிரதிபலித்து வீட்டின் உட்புற வெப்பத்தாக்கம் கட்டுப்படுத்த மட்டுமே.

சிவப்பு டைல்ஸ் பதித்த மொட்டை மாடியில் உச்சி வெயில் நேரத்தில் சூரிய ஒளி சிகப்பு டைல்ஸ் மீது பட்டு உள்வாங்கி, வெதரிங் கோர்ஸ் மற்றும் ரூஃப் கடந்து, வீட்டுக்குள் அதிகமான உஷ்னத்தை கொடுக்கின்றது.

ஆனால் லுனி கூல் ரூஃப் டைல்ஸ் பதித்த மொட்டை மாடியில் வெப்பம் பிரதிபலிக்கப்படுவதால், வீட்டுக்குள் வெப்பத்தின் தாக்கம் ரூஃப் மூலமாக வருவதை தடுத்து சாதாரண சீதோஷன நிலையை தக்க வைக்கிறது.

உதாரணத்திற்கு சம பரப்பளவு கொண்ட, சிவப்பு டைல்ஸ் பதித்த ரூம், மற்றும் லுனி கூலிங் டைல்ஸ் பதித்த ரூம் இரண்டிலும் AC-யை 23 டிகிரி செல்சியஸ் இலக்காக ஒப்பிடுகையில், சிவப்பு டைல்ஸ் பதித்த அறையில் AC-யை பயன்படுத்தி 23 டிகிரி செல்சியஸ் இலக்கை அடைய தோராயமாக 12-15 நிமிடங்கள் எடுத்துக்கொள்வதோடு AC தொடர்ந்து இயங்கினால் மட்டுமே குளிர்ச்சியை தக்கவைக்க முடியும். லுனி கூலிங் டைல்ஸ் பதித்த ரூமில் குள்ளிர்ச்சி அடைய 7 முதல் 10 நிமிடங்களில் மிக விரைவில் 23 டிகிரி செல்சியஸ் அடைவதினால் AC யின் பயன்பாடு குறைவதோடு நீண்ட நேரத்திற்கு குளிர்ச்சியும் நீடிப்பதால் நமக்கு மின் சிக்கனம் ஆகும்.

கூல் ரூஃப் டைல்ஸ் ஏன் வெள்ளை நிறத்தில் தயாரிக்கப்படுகிறது, என பல வாடிக்கையாளர்கள் கேட்கின்றனர்...

வெப்பத்தை அதிகமாக பிரதிபலிக்கும் திறன் வெள்ளை நிறத்தில் தான் அதிகம் உள்ளது, வெள்ளை நிறம் தவிர எந்த நிறம் பயன்படுத்தினாலும் வெப்பமானது உள்வாங்க அதிக வாய்ப்புள்ளது. ஆகையால் தான் நம் லூனி கூல் ரூஃப் டைல்ஸ் வெப்பத்தை பிரதிபலிக்கும் இயற்கையாக கிடைக்கும் (Eco-Friendly) வெள்ளை நிற மூல பொருட்களால் வெள்ளை நிறத்தில் தயாரிக்கப்படுகிறது.

அதிக வாடிக்கையாளர்கள் கேட்கும் ஒரு கேள்வி இது. ஒரு டைல்ஸ்க்கும் மற்றொரு டைல்ஸ்க்கும் 5 - 8 mm இடைவெளி விட்டு பதிக்கப்படும் போது, அந்த இடைவெளியில் Grouting material-ஐ Paste பதத்திற்கு நிரப்புகையில் அது முழுமையாக நிரப்புவது கடினம். டைல்ஸ்-ன் 15 mm கனம் கொண்ட டைல்ஸ்-ல் மேலிருந்து கீழ் முழுவதும் கிரவுட் நிரப்ப வேலை செய்யும் நபர்கள் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். கிரவுட்டிங் செய்யும் போது தவறுதலாக சில இடங்களில் மேலிருந்து 1mm வெற்றிடம் (Hollows) ஏற்படடாலும், இது நாளடைவில் நாம் நடக்க நடக்க அதில் Hairline crack அல்லது ஜல்லி வேர் போன்ற கிராக் உருவாக வாய்ப்புள்ளது. ஆகையால் கிரவுட்டிங் செய்யும் போது கூழ் பதத்தில் கரைத்து நிரப்புகையில், டைல்ஸ்-ன் இடைவெளியில் முழு கொள்ளளவிலும் 15mm முழுவதும் grouting material நிறைந்து, நல்ல bonding-ஐ கொடுக்கும். எனவே grouting material-ஐ கண்டிப்பாக கூழ் பதத்தில் கரைத்து அதில் தேவையான அளவு Waterproof compound சேர்த்து பயன்படுத்துவது நல்லது.